கவிதைமணி

என் ஓட்டம்...என்இலக்கு:  தேன்ராஜா'

கவிதைமணி

என் ஓட்டம்  
மராத்தான்.... 
இலக்கு அதில்  
முதல்தான்...  

மராத்தான்  ஓட்டம் 
மாதிரியேதான் 
வாழ்க்கையும் ..

மெதுவாக 
ஓடி ஓடி 
வெற்றிக்கோட்டுக்கு 
சிறிது தூரம் 
வரும்போது 
வேகமாக ஓடுவதுதான் 
சிறந்த வாழ்க்கை...

ஆற அமர 
அனுபவித்து 
ஓடினால்தான்
வாழ்க்கை சிறக்கும் ..

எடுத்த எடுப்பிலேயே  
வேகமாய் ஓடினால் 
வாழ்க்கை  நம்மை 
பார்த்து சிரிக்கும் ..

சீராய் ஓடி 
சிறப்பாய்  
வாழவேண்டும் ...
விறு விறு வென்று 
ஓடினால் 
வாழ்க்கையே 
வெறுக்கும் ...

என் ஓட்டம் 
மாரத்தான்... 
அதில் இலக்கு 
முதல்தான் ..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT